ஆதிவாசி பதிவர்கள், வீடியோ பதிவர்கள் மற்றும் டிஜிட்டல் செல்வாக்கு உடையவர்களுக்கான தேடல் தொடங்கியுள்ளது!
நீங்கள் சத்தீஸ்கர், திரிபுரா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு ஆதிவாசி படைப்பாளராக இருந்தால், உங்களின் குரல்களைப் அதிகமான பார்வையாளர்களுக்கு கொண்டுச்செல்ல விரும்பினால், உங்கள் தேவைகளை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்ட எங்கள் பயிற்சி வகுப்பில் சேருங்கள்!
7 நாட்கள் கொண்ட தீவிரமான பாடத்திட்டத்தின் கீழ் விருது பெற்ற பயிற்சியாளர்களுடன் பயிற்சி அமர்வுகள் இருக்கும். அவர்கள் நீங்கள் டிஜிட்டல் ஸ்டொரிடெல்லராக மாறுவதற்கு வழிகாட்டுவார்கள். உங்கள் திறமை மற்றும் தனித்துவத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை அறிந்துக்கொள்ளுங்கள். மேலும், உலக பார்வையாளர்களுக்கான தனித்துவமான படைப்புகளை உருவாக்குங்கள்.
உங்கள் திறமையை இவ்வுலகம் பார்க்கட்டும் கேட்கட்டும்.
தமிழ்நாட்டிற்கான பயிற்சி தேதிகள்:- அக்டோபர் 8 முதல் அக்டோபர் 14 வரை

ஏவ்வாறு விண்ணப்பிப்பது: இது 1-2-3 என்பதை போல ஏளிதானது:-
-
உங்களின் கட்டுரை (800 வார்த்தை) அல்லது 2 நிமிட காணொலி அல்லது உங்கள் பத்திரிகை அல்லது திரைப்படத் தயாரிப்பு அல்லது சமூக ஊடக திறமையை வெளிப்படுத்தும் 15 வினாடி ரீல் ஆகியவற்றை தயார் செய்யவும்!
-
உங்களின் திறமையை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றவும், மேலும் எங்களை @adivasilivesmatter என டாக் செய்து #AdivasiAwaaz2022 என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தவும்.
-
உங்கள் பதிவை முடிக்க இந்தப் படிவத்தை நிரப்பவும்
என்னேன்ன அடங்கியுள்ளது
-
முன்னணி பயிற்சியாளர்களுடன் 7 நாட்கள் பயிற்சி.
-
ALM டி-ஷர்ட், முகமூடிகள் மற்றும் கைப்பை கொண்ட பொருட்களின் கிட்.
-
டிஜிட்டல் ஸ்டொரிடெல்லராக மாறுவதற்கான குறிப்புகள் மற்றும் வழிகாட்டுதல்.
-
கட்டுரை எழுதுதல், வீடியோக்கள் உருவாக்குதல் மற்றும் சமூக ஊடகங்களை பயன்படுத்துதல் பற்றிய வகுப்புகள்.
-
ஆதிவாசி லைவ்ஸ் மேட்டருடன் ஊதியம் பெற்ற இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள்.
-
இந்தி, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 45 பிரத்யேக பயிற்சி வீடியோக்களுக்கான அணுமதி
-
பத்திரிகை, திரைப்பட துறை மற்றும் சமூக ஊடகங்களில் உள்ள சிறந்த நபர்களுடன் தொடர்புகொள்ளும் வாய்ப்பு.
பயிற்சி செயல்முறை
தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் சத்தீஸ்கர், தமிழ்நாடு மற்றும் திரிபுராவில் உள்ள எங்கள் பயிற்சி மையங்களுக்கு அழைக்கப்படுவார்கள், அங்கு அவர்களுக்கு எங்கள் நிபுணர் குழு மூலம் தனிப்பட்ட முறையில் பயிற்சி அளிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் ஏழு நாட்களுக்கு ஒதுக்கப்படும் மையத்தில் தங்க வேண்டும்.
பணம் செலுத்துதல்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு பங்கேற்பாளரும் ரூ. 1000 செலுத்தி பதிவு செய்ய வேண்டும். பயிற்சியின் போது தங்க இடம் மற்றும் உணவு வழங்கப்படும்.